ஏனாம் தொகுதி முழுவதும் 500 பணியாளர்கள் 50 டிராக்டர்கள் மூலம் துப்புரவு செய்யும் பணி..
புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் கடந்த காலங்களில் 250 துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது எச்.ஆர்ஸ் கொயர் என்ற தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. வெறும் 50 பணியாளர்களை கொண்டு துப்புரவு பணி மேற்கொள்வதால் , சரிவர குப்பைகளை வாருவதில்லை என்றும் ஏனாமில் பல்வேறு இடங்கள் மூலமாக குப்பைகள் மாலை போல் குவிந்து இருப்பதாகவும், அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் ஏற்பாட்டில் 500 பணியாளர்கள்,50 டிராக்டருடன் ஏனாம் முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்ளும் துவக்க நிகழ்ச்சி ஜிஎம்சி பால யோகி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இதனை மல்லாடி கிருஷ்ண ராவ் தொடங்கி வைத்தார்.
மேலும் கட்சி வேறுபாடு இன்றி துப்புரவு பணியில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
No comments